BRTE - ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்வில் கணவன் / மனைவி (Spouse Priority) - முன்னுரிமை மாவட்டத்தை மாற்றி எடுத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி உத்தரவு !

 பள்ளிக் கல்வித்துறை செய்திகள்  : BRTE - ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் கணவன் / மனைவி முன்னுரிமை (Spouse Priority) - முன்னுரிமை  மாவட்டத்தை மாற்றி எடுத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி உத்தரவு !

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 20.10.2021 அன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கணவன் / மனைவி பார்வை பொதுமாறுதல் கலந்தாய்வு முன்னுரிமை ( Spouse Priority ) முன்னுரிமை மாவட்டத்தை மாற்றி எடுத்தவர்களின் பெயர்பட்டியல் கோருதல் சார்ந்து . இவ்வியக்கக இதே எண்ணிட்ட கடிதம் , நாள் . 13.10.2021 . பார்வையில் காணும் செயல்முறைகளின்படி , 20.10.2021 அன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வின் போது கணவன் / மனைவி முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னுரிமை மாவட்டத்தில் காலிப் பணியிடம் இருந்த போதிலும் , அதனை தவிர்த்து வேறு மாவட்டத்தை தேர்வு செய்த ஆசிரியர் பயிற்றுநர்களின் விவரங்களை 29.10.2021 மாலை 03.00 மணிக்குள் இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) மின்னஞ்சல் ( jdpcc2018@gmailcm ) முகவரிக்கு உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..  


Post a Comment

0 Comments