TNPSC தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?

TNPSC தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?

TNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது மற்றும் இல்லாதது),மற்றும் குரூப் 4 (VAO உட்பட) இந்த இரண்டு தேர்வுகளை பற்றி மட்டும்.

இந்த இரு TNPSC தேர்வுகளுக்கும் நீங்கள் தயாராகும் முன்பு முக்கியமாக உங்களை விட TNPSC வாரியத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துக்கொண்டு உங்களின் பயிற்சியை ஆரம்பியுங்கள்.நான் இதை சொல்லுவதற்கு காரணம் நாம் எந்த ஒரு தேர்வை அணுகும்போதும் நம்முடைய படிக்கும் திறன்,முயற்சி இதையெல்லாம் விட நம் மனநிலையை பொறுத்தே நம்முடைய வெற்றி, தோல்வி அமையும்.

எந்த சூழ்நிலையிலும் உங்களின் TNPSC தேர்வு முறை (TNPSC உட்பட) நம்பிக்கையின் மீது சந்தேகம் இல்லாமல் TNPSC க்கு தயாராகுங்கள்.

விஷயத்துக்கு வரலாம்.

இதற்கு முன்பு போல் இல்லாமல்,தற்போது TNPSC ல் GROUP 2க்கு தனியாகவும், Group 4 க்கு என்று தனியாகவும் நீங்கள் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.அதாவது இதுவரை நீங்கள் பொதுத்தமிழையோ அல்லது பொதுஆங்கிலத்தையோ மட்டும் தேர்ந்துஎடுத்து படித்து Gr 2 ,Gr 4 யை எழுதியிருப்பீர்கள். இனி அப்படி நீங்கள் எழுத முடியாது.

உங்களுக்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஒன்று மட்டுமே வரும் இரண்டும் படிக்க கஷ்டம் என்று எண்ணினால் உங்களால் Gr 2 எழுதமுடியாது. புதுத்தேர்வு முறைப்படி Group2க்கு நீங்கள் தயாராக வேண்டுமென்றால் தமிழை தவிர ஆங்கிலமும் கண்டிப்பாக கற்றுஅறியவேண்டும்.

‌நம்மில் பலர் பொதுதமிழை மட்டும் நம்பிதான் பொதுவாக TNPSC தேர்வை அணுகுவார்கள்.பொதுதமிழில் அவர்களை அடித்துக்கொள்ளமுடியாது,ஆனால் இனி அவர்கள் அடிப்படை ஆங்கிலத்தையும் கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டும்.

நீங்கள் Gr 4 மட்டும் எழுதபோகிறீர்கள் என்றால் கவலைப்படாமல் ஏதாவது ஒன்றை (தமிழ்,ஆங்கிலம்) தேர்ந்தெடுத்து உங்களின் கணக்கை தொடங்கலாம்.

என்னை பொறுத்தவரை பொதுஆங்கிலத்தை எழுதிப்பழகுங்கள், தமிழை விட எளிதாகவும்,படிக்க மிகச்சுலபமாகவும்(தேர்வுக்கு) இருக்கும். அதே சமயம் உங்களின் ஆங்கில இலக்கண அறிவு உங்களை TNPSC தவிர மற்ற போட்டி (SSC) தேர்வுகளிலும் போட்டியிட உதவும்.

‌Group 2 க்கு நீங்கள் தயாரானால் அது gr 4 க்கும் உதவும்.Group 2க்கு முன்பைவிட தற்போதைய தேர்வுமுறை சற்று கடினமானது என்று எண்ணி இதில் உள்ள வாய்ப்புகளை வீணாக்கிவிடாதீர்கள்.முன்பைவிட கண்டிப்பாக Gr 2 தேர்வுக்கான போட்டியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக வரும்காலங்களில் குறைய வாய்ப்புண்டு. வரும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

‌Group 2 பொறுத்தவரை முதலில் (Prelimary) பொதுபாடத்தில் 175 மதிப்பெண்ணுக்கு (General Studies) அதிகப்படியான கவனம் செலுத்தி உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.கண்டிப்பாக வெறும் பள்ளிப்பாட புத்தகத்தில் இருந்துமட்டும் இனி கேள்விகளை நாம் எதிர்ப்பார்க்க முடியாது.

பொது அறிவியல், பொருளாதாரம்,தற்போதைய நாட்டுநடப்புகள்,இந்திய, தமிழக வரலாறு,இந்திய குடிமையியல் முக்கியமாக மாநில சரத்துகள்,இன்னும் இதைத்தவிர தமிழ்நாட்டின் அரசியல்,சட்டங்கள், கலை,விளையாட்டு,புதியதாக உருவாக்கப்பட்ட சட்டங்கள்,மாவட்டங்கள், இப்படி நம் மாநிலச்செய்திகளை தமிழ்நாடு வரலாறு புத்தகத்தில் இருந்தும்,இணையதளத்தில் இருந்தும் குறிப்பெடுத்து கொள்ளுங்கள்.

இதை தவிர திருவள்ளுவரையும் திருக்குறளையும் இனி சாதாரணமாக நினைக்கவேண்டாம்.

25 மதிப்பெண்ணையும் நீங்கள் கணிதத்தில்(Aptitude) முழுவதும் பெற முயற்சி செய்யுங்கள்.LCM, HCF, P/L, SI,CI, WORK AND TIME, MENSURATION,போன்ற பிரிவுகளில் நன்கு பயிற்சிச்செய்து பழகுங்கள்.முடிந்தளவு 25யையும் உங்களுக்குரியதாக்கி கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் முதன்மை தேர்வில் மட்டும் வரும் OBJECTIVE type கேள்விகள்.

6. அடுத்த Main தேர்வு உங்கள் கதைக்கான (Descriptive type) நேரம்.இதில் தனித்தனியாக இரண்டு பிரிவு (Paper 1 & 2) உண்டு.

முதலில் தமிழில் இருந்து ஆங்கிலமும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு (Translation) செய்ய வேண்டும்.கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த தேர்வுக்கான உங்களின் பதிலை (Paper 2) கணக்கில் கொண்டு திருத்த முடியும்.

தினசரி ஆங்கில செய்தித்தாளை படித்தாலே போதுமானது.கேள்வியில் கொடுத்து இருக்கும் மொழிபெயர்ப்பு எந்த காலத்தை(கடந்த, நிகழ், எதிர்) சேர்ந்தது என்று கண்டுபிடித்தல்,இலக்கணத்தை புரிந்துக்கொள்ளுதல்,தினசரி Vocabulary யை வளர்த்துக்கொள்ளுதல் மற்றும் தினசரி பயிற்சியின் மூலம் இந்த பிரிவை எதிர்கொள்ளலாம்.

‌இந்த பிரிவில் தேர்ச்சி அடைந்தபின் அடுத்த பிரிவை (Paper 2) தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ முழுவதுமாக ஒரே மொழியில் அனைத்து உட்பிரிவையும் எழுத வேண்டும்.

இந்த Paper 2 ல் உள்ள உட்பிரிவை எழுத கட்டாயம் நமக்கு தமிழ்நாட்டின் சங்க வரலாறு,நாட்டியம்,இசை,கலை,பண்டமாற்றுமுறை,சமூக பொருளாதாரம் போன்றவற்றை பற்றி குறைந்தபட்சம் முடிந்தால் அதிகமாக தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது.காரணம் நீங்கள் இதற்கு முன்பு எழுதிய Prelimiry, Main Paper 1 ம் உங்களின் வெற்றியை தீர்மானிக்கப்போவது இல்லை. Main தேர்வில் எழுதும் Descriptive Paper 2 மட்டுமே முழுக்க முழுக்க உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்.

‌TNPSC க்கு என்று இனி தனியாக சமச்சீர் புத்தகம், Local Branded புத்தகம்,இவற்றை தவிர Standrad ஆங்கில புத்தகங்கள்,NCERT,முக்கியமாக உங்களுக்கு கடினமாக நினைக்கும் தலைப்புகள்,அல்லது அதிக தகவல்கள் பெற கஷ்டமாக உள்ள தலைப்புகளை இணையத்தில் இருந்து தனியாக எடுத்துவைத்துக்கொண்டால் படிக்க உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

‌மற்ற தேர்வுகளை போல இல்லாமல் Tnpsc தேர்வுயன்று தேர்வுஅறைக்குள் மிக அதிக நேரம் யோசிக்க கிடைக்கும்,அதனால் நீங்கள் ஒவ்வொரு தலைப்பிலும் (முக்கியமாக திருக்குறள் சம்பந்தமாக) எவ்வளவு தகவல்களை தெரிந்துவைத்துஉள்ளீர்கள் என்பதை பொறுத்தே உங்களின் தேர்வும்,அதைத்தொடர்ந்து இறுதியில் வரும் தேர்வு முடிவும் அமையும்.

என்னை பொறுத்தவரை முன்பைவிட தற்போது உள்ள பாடமுறையில் மிக எளிதாக வெற்றியை அடையலாம்.

Post a Comment

0 Comments