PGTRB Tamil Exam Preparation Tips in Tamil

PGTRB Tamil Exam Preparation Tips in Tamil

PGTRB Tamil Exam Preparation Tips in Tamil


Tamil Nadu TRB PG Assistant Teachers Exam Success Tips :

Tamil Nadu TRB PG Assistant Teachers முதுகலை ஆசிரியர் தேர்வு பாடத்திற்கு எப்படி படிக்கலாம், என்ன மாதிரி புத்தகங்கள் வாங்கி படிக்கலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்கலாம்.

வாய்ப்புகள் கிடைப்பது ஒருமுறை தான் :

தற்போழுது முதல் தடவையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத கூடியவர்களாக இருக்கலாம் அல்லது இரண்டு, மூன்று தடவை தேர்வு எழுதியவராக இருக்கலாம். இதில் ஒரு விஷயத்தை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுதே அதே நாம் உடனே பயன்படுத்திகொள்ள வேண்டும். ஒவ்வொரு தடவையும் வாய்ப்புகள்  நமக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் நண்பர்கள் இனி வரக்கூடிய ஆசிரியர் தேர்வுகள் அனைத்திலும் முழு கவனத்துடன் படித்தால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும.

குறிப்பு எடுத்து படிக்க வேண்டும் :

நாம் படிப்பது ஒரு தடவை தான் அதை நன்றாக மற்றும் முழுமையாக ஏதேனும் ஒரு தேர்வில் கண்டிப்பாக நம்மால் தேர்ச்சி பெற முடியும். அதற்கு நல்ல தரம் வாய்ந்த புத்தகங்களை வாங்கி இபொழுது இருந்தே படிக்க வேண்டும். அதுவும் படிக்கும் பொழுது கண்டிப்பாக குறிப்பு எடுத்து படிக்க வேண்டும், ஏன் என்றால் இது தேர்வு  இறுதி நாட்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பள்ளி பாட புத்தகங்களை படிக்க வேண்டுமா :

பள்ளி பாட புத்தகங்களை பொறுத்த வரை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாட புத்தகங்களையும் நன்றாக படிக்க வேண்டும். இதில் இருந்தே 20%  முதல் 30% வரை வினாக்கள் தேர்வுகளில் வருகின்றன. இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் பள்ளி பாட புத்தகங்களை படிக்கும் பொழுது ஒரு பாடமே திரும்ப திரும்ப வருவதாக தெரியும், ஆனால் கதைகள் அல்லது கருத்துக்கள் வேறாக இருக்கும். அதனால் பாடங்களை கவனித்து புரிந்து படித்தால்தான் தேர்வில் எந்த மாதிரி வினாக்கள் கேட்டாலும் நாம்மால் பதில் அளிக்க முடியும்.

தற்போழுது உள்ள தேர்வுகளில் வினாக்கள் பாட பகுதியின் உள் இருந்தது கடினமான வினாக்களாக கேட்கிறார்கள் அதனால் நாம் இப்பொழுது படிக்கும் பொழுதே கவனமாக படிக்க வேண்டும்.      அடுத்தாக தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன் அவர்களுடைய புத்தகம், தேவிரவின்- பொதுத்தமிழ் புத்தகம், இந்த இரண்டு புத்தகங்களும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாதிரி வினாக்கள் பயிற்சி :

அடுத்தாக நீங்கள் பயற்சி செய்வதற்கு பல்வேறு மாதிரி வினாக்கள் வேண்டும் அதற்கு பல்வேறு மார்க்கெட் புத்தகங்களை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். இதில் முந்தைய தேர்வு வினத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களும் இருக்கும். இது உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள உதவும். மார்க்கெட் புத்தகங்களை\ பொறுத்தவரை சக்தி கைடு, சுரா கைடு, ஏகிள் eye, TNPSC புத்தகம் ஆகியவற்றை வாங்கி நாம் இந்த தேர்வுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்..

Post a Comment

0 Comments